நல்லது நடக்கும் என நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்: நடிகர் விஜய்சேதுபதி

  முத்து   | Last Modified : 18 Apr, 2019 01:23 pm
i-am-confident-that-good-will-happen-actor-vijay-sethupathi


நல்லது நடக்கும் என நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சென்னை கோடம்பாக்கத்தில் இன்று வாக்களித்தபின் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கார்ப்பரேஷன் காலனி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றியபின் வெளியே வந்த நடிகர் விஜய் சேதுபதி  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், ‘முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு என் வாழ்த்துகள். வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பல்வேறு கருத்துகள் சர்சைகள் சமூக வலைதளங்களில் வருகிறது. அதை நானும் பார்க்கிறேன் அதற்கு என்ன தீர்வு  என எனக்கு தெரியவில்லை’ என்றார்.

மேலும், சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் பேச ஆரம்பித்துள்ளனர். அனைவருக்கும் புரிதல் உள்ளது இது வரவேற்கத்தக்கது என்றும், நல்லது நடக்கும் என நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் எனவும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close