உரிமைக்காக போராடுங்கள்: வாக்களித்த சிவகார்த்திகேயன் ட்வீட் !

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 02:46 pm
sivakarthikeyan-cast-his-vote

சென்னை தி.நகரில் உள்ள இந்தி சபாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்தார். 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். 

இன்று சென்னை தி.நகரில் உள்ள இந்தி சபாவில் வாக்களிக்க சிவகார்த்திகேயன் சென்ற போது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அதிகாரிகள் முதலில் கூறியுள்ளனர். அவரும் அதிர்ச்சியாகவே, பிறகு பட்டியலை சரிபார்த்து அவரது பெயர் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாக்களிப்பது உங்கள் உரிமை; அந்த உரிமைக்காக போராடுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close