தடம் படத்தின் 50 - வது நாளை கொண்டாடும் அருண்விஜய் ! 

  கண்மணி   | Last Modified : 19 Apr, 2019 03:36 pm
thadam-50th-day-celebration

அருண்விஜய்  நடித்த 'தடம்' திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையிடப்பட்டு வருகிறது . இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அருண் விஜய் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார்.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தடம்.  இந்த படத்தில் அருண்விஜய் இரு வேறுபட்ட தோற்றங்களில் நடித்திருந்தார்.  மேலும் தன்யாஹோப்,வித்யா பிரதீப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  தடம் படத்திற்கான இசையை அருண் ராஜ் அமைத்துள்ளார்.  மார்ச்  1ல்  திரைக்கு வந்த இந்த படம் நல்ல ரேட்டிங்கை பெற்றது. 

இந்நிலையில் , 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தடம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, அருண்விஜய் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார் இந்த தகவலை தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close