விஜய்யின் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு

  கண்மணி   | Last Modified : 19 Apr, 2019 03:27 pm
vijay-s-thalapathi-63-film-to-be-banned

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 63 படத்திற்கு தடை விதிக்க கோரி, குறும்பட இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அட்லீ‍‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதுகிறார். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், தளபதி 63 திரைப்படத்திற்கு தடை வித்திக்க கோரி செல்வா என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கால்பந்தாட்டத்தை மையமாக வைத்த‌ 256 பக்கங்கள் கொண்ட கதையை எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும், சில பட தயாரிப்பாளர்களிடம், இந்த கதையை சொல்லியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கதையை வைத்து எடுக்கப்படும் விஜயின் 63-ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல்  23 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close