இயக்குனர் ஷங்கரை கௌரவித்த இயக்குனர்கள்

  கண்மணி   | Last Modified : 22 Apr, 2019 10:14 am
director-shankar-honored-directors

இயக்குநர் ஷங்கர் திரைத்துறைக்கு வந்து  25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ஷங்கர் 25-ஐ கொண்டாடும் விதத்தில் நிகழ்ச்சி ஒன்றை இயக்குநர் மிஷ்கின் அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கௌதம் வாசுதேவ் மேனன், மணிரத்தினம், ரஞ்சித், வசந்தபாலன்,  பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, சசி, அட்லீ, உள்ளிட்ட தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இதில் கலந்து கொண்ட இயக்குனர்கள் அனைவரும்  நீல நிறத்தில் ’S25' என்கிற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த டி-ஷர்ட்டை அணிந்து வந்து ஷங்கரை கௌரவப்படுத்தியுள்ளனர். தற்போது, இந்நிகழ்ச்சியில், எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த நல்ல தருணத்தை மிஸ் செய்து விட்டதாக AR முருகதாஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close