மனைவியின் படப்பிடிப்பை பார்வையிட்ட சூர்யா

  கண்மணி   | Last Modified : 23 Apr, 2019 12:25 pm
jyotika-s-next-productionno11wrapsup

ஜோதிகாவின் புதிய திரைப்படத்திற்கான‌ பாடல் காட்சியை  படமாக்கியதுடன் முடிவடைந்த படப்பிடிப்பில் ஜோதிகாவின் கணவரும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருமான, நடிகர் சூர்யா பங்குபெற்றுள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர்.

திருமணத்திற்கு பின்னர் ஜோதிகா நடித்துவரும் படம் அனைத்துமே ஹிட்டாகி வருகிறது. அந்த வரிசையில் ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'காற்றின் மொழி' பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஜோதிகா தன‌து கணவரான சூர்யாவின், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 'குலேபகாவலி' கல்யாண் இயக்கும் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

டார்க் காமெடி திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பாடல் காட்சியை  படமாக்கியதுடன் முடிவடைந்த படப்பிடிப்பில் நடிகர் சூர்யா பங்குபெற்றுள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர்.

 

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 22, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close