நான் ராசியில்லதவளா? பதிலடி கொடுத்த ப்ரியா ஆனந்த் 

  கண்மணி   | Last Modified : 24 Apr, 2019 08:07 am
priya-anand-twit

ஶ்ரீதேவி மற்றும் ஜே.கே ரித்திஷின் மர‌ணத்திற்கு காரணம், ப்ரியா ஆனந்த் அவர்கள் இருவருடன் இணைந்து, நடித்தது தான் என பதிவிட்டிருந்த நபரின் பதிவிற்கு, கோபத்துடன் பதில் ட்விட் செய்துள்ளார் ப்ரியா ஆனந்த்   

சமீபத்தில் ஆணழகன் என்பவர் ட்விட்டர் பக்கத்தில், ப்ரியா ஆனந்த்   `இங்கிலீஷ் விங்கிலீஷில் 'நடித்ததால் ஶ்ரீதேவி இறந்துவிட்டார். அதேபோல‌  ப்ரியா ஆனந்த் `எல்.கே.ஜி'படத்தில் நடித்ததால் ஜே.கே ரித்திஷ் இறந்துவிட்டார். இது ப்ரியா ஆனந்தின் பேட் லக்காக இருக்குமோ?'  என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த ட்விட் பதிவை படித்த ப்ரியா ஆனந்த் கோபத்தில் பதில் ட்விட் செய்திருந்தார்.

அதில்,நான் பொதுவாகவே இது போன்ற பதிவுகளுக்கு பதிலளிக்க மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் சபை நாகரிகம் என்ன என்பதை மறந்து, பல பேர் இப்படி ஒரு பதிவுகளைச் செய்கிறார்கள்.

இறந்து போன இருவரும் மிக நல்லவர்கள் அவர்களை இழந்த துக்கத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை.  என பதிவிட்டிருந்தார். பின்னர், ப்ரியா ஆனந்தை தவறாக சித்தரித்த அந்த நபர்  ப்ரியா ஆனந்திடம் ட்விட்டரில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close