நடிகர் விஜயின் படப்பிடிப்பில் விபத்து

  கண்மணி   | Last Modified : 24 Apr, 2019 11:51 am
accident-in-thalapathi-63-shooting-spot

தளபதி 63 படப்பிடிப்பின்போது லைட் அவிழ்ந்து விழுந்த விபத்தில் பணியாளர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

"மெர்சல்" படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்திலும் நடிகர் விஜய்  நடித்து வருகிறார். விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

அதோடு அட்லீ - விஜய் காம்போவில் வெளியான முந்தைய படங்களில் இடம்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லி அருகே பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக, அங்கு 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் அவிழ்ந்து விழுந்தது. இதில், படப்பிடிப்பு யூனிட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த எல்க்ட்ரீசியன் செல்வராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close