2018ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படம் பரியேறும் பெருமாள்!

  கண்மணி   | Last Modified : 24 Apr, 2019 01:36 pm
2018-best-film-pariyerumperumal

மும்பையில் நடைபெற்ற இந்திய சினிமா விமர்சர்களால் நடத்தப்படும், CRITICS CHOICE FILM AWRDS விருது விழாவில் 2018 ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்படமாக பரியேறும் பெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது.

க‌திர்  நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

மேலும் இத்திரைப்படம், உலக திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வந்த நிலையில், பிரான்ஸ் திரைப்பட விழாவிலும், பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை பெற்றதோடு,அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.இந்நிலையில் மீண்டும் ஒரு விருதினை தன் வசம் ஆக்கியுள்ளது பரியேறும் பெருமாள். 

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற‌ இந்திய சினிமா விமர்சர்களால் நடத்தப்படும் CRITICS CHOICE FILM AWRDS விருது விழாவில், 2018 ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படமாக பரியேறும் பெருமாள் தேர்ந்தெடுக்கபட்டு கெளரவிக்கபட்டது.  இந்த விருதினை, இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூரும் நடிகை அதிதிராவும் வழங்க இயக்குனர் மாரிசெல்வராஜ் பெற்றுகொண்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close