இரஞ்சித்துடன் இணைந்து படம் எடுக்க ஆசைப்படும் பாலிவுட் இயக்குனர்

  கண்மணி   | Last Modified : 24 Apr, 2019 02:00 pm
anurag-kashyap-like-to-join-with-ranjith

பா.ரஞ்சித்தை சந்தித்த அனுராக் காஷ்யப் "இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார். 

ரஜினிகாந்தின் நடிப்பில்  காலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித். இவரின் கடந்த ஆண்டு படைப்பான பரியேறும் பெருமாள் இன்று வரை பல விருதுகளை குவித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டி வரும் அனுராக் காஷ்யப். ரஞ்சித்துக்கு சாமீபத்தில் மும்பையில் விருந்தளித்துள்ளார்.

அப்பொழுது ரஞ்சித்திடம் "இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அனுராக் காஷ்யப்.  இவர்  நயன் தாரா நடிப்பில் திரைக்கு வந்த இமைக்கா நோடிகள் திரைப்படத்தில், மித்ரன் கதாபாதிரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close