ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' : அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர்!

  முத்துமாரி   | Last Modified : 25 Apr, 2019 12:15 pm
avengers-endgame-leaked-on-tamilrockers-before-release

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே, தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ்' படத்தின் 4ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. நாளை(ஏப்ரல் 26) ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிறப்பு பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த வேளையில், இப்படத்தினை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே, இணையதளத்தில் வெளியானது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close