அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் உள்ளவர்கள் அரசியலுக்கு தேவை: விஜய் சேதுபதி

  அனிதா   | Last Modified : 25 Apr, 2019 05:12 pm
those-who-know-the-knowledge-can-come-to-politics-vijay-sethupathi

யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மன பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 

மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெள்ளித்திரை நடிகர்கள், சின்னத்திரைக்கு வருவது வரவேற்கத்தக்கது. ஆரோக்கியமானது. நடிப்பில் சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற பாகுபாடு கிடையாது என தெரிவித்தார். 

மேலும், "வாக்களிப்பது உரிமை, கடமை. வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகர்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அணில் சேமியா விளம்பரத்தில் கிடைத்த ஊதியத்தில் எந்த கிராமத்தையும் தத்தெடுக்கவில்லை அது முற்றிலும் தவறான செய்தி. அப்போது அரியலூர் மாவட்டத்திற்கு ரூ.50 லட்சம் கொடுத்ததற்கான விளக்கத்தை அங்கேயே தெரிவித்துவிட்டேன்.

பலர் எத்தனையோ உதவிகளை எந்த விளம்பரமும் இன்றி செய்து வருகின்றனர். இதற்கு மேல் நான் விளக்கம் அளிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். 

சமூக வலைத்தளங்களில், தவறான செய்திகள் விரைவாக பரவுகின்றன. இளைஞர்கள் தவறான செய்திகள் பரவுவதை தடுத்து பாதுகாப்பாக கையாளவேண்டும் என தெரிவித்தார். அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மன பக்குவமும் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close