ஆட்சி மாற்றம் வரவேண்டும் என நான் கூறவில்லை - நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!

  முத்துமாரி   | Last Modified : 26 Apr, 2019 06:13 pm
vijay-sethupathi-at-kovai

"ஆட்சி மாற்றம் வரவேண்டும் என நான் கூறவில்லை; எனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது" என நடிகர் விஜய் சேதுபதி மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபல நகைக் கடையான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் 160 வது ஷோரூம், கோவை காந்திபுரம் நூறடி சாலையில் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அடுத்ததாக மே 15ம் தேதி தான் நடித்துள்ள 'சிந்துபாத்' படம் வெளியாக உள்ளது எனவும் அனைத்து விதமான படங்களிலும் தான் நடித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், ஆட்சி மாற்றம் வர வேண்டும் என தான் குறிப்பிடவில்லை எனவும் தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக நேற்று மதுரை ஜாய் ஆலுக்காஸ் ஷோ ரூம் திறப்பு விழாவிற்கு பின்னர் பேசிய அவர், 'அனைவரையும் போலவே நானும் தேர்தல் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எல்லாவற்றிலும் மாற்றம் அவசியமானது' என்று கூறியிருந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close