விஷாலுக்கு பதிலாக சேகரை நியமித்தது தமிழக அரசு

  கண்மணி   | Last Modified : 27 Apr, 2019 06:13 pm
the-government-of-tamil-nadu-has-appointed-shekar-instead-of-vishal

விஷால் தலைமையிலான  தயாரிப்பாளர் சங்கம், விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காததும், கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காததும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தை  நிர்வகிக்க, தமிழக அரசு சார்பாக மாவட்டப் பதிவாளர் அந்தஸ்தில் இருக்கும் சேகர் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கங்கத்தில் முறையாக கணக்குகள் பராமரிக்கப்படவில்லை என பல புகார் எழுந்தவண்ணம் இருந்து. அதனடிப்படையில் விஷால் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசு சார்பில் பூட்டு போடப்பட்டது.

இதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்தை களைத்து விட்டு, அரசு சார்பாக அதிகாரி ஒருவரின் தலைமையில் சங்கம் செயல்பட வேண்டும் என, எதிர் தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் விஷால் தலைமையிலான  தயாரிப்பாளர் சங்கம், விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காததும், கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காததும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தரப்பு கொடுத்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை என கூறி தமிழக அரசு சார்பாக மாவட்டப் பதிவாளர் அந்தஸ்தில் இருக்கும் சேகர் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close