இன்று பிறந்த நாள் காணும் நாயகிக்கு குவியும் வாழ்த்துக்கள் !

  கண்மணி   | Last Modified : 28 Apr, 2019 11:27 am
samantha-akkineni-s-birthday-today

பேரழகி சமந்தாவின் பிறந்தா நாள் இன்று(28/4/2019) கொண்டாடப்படுகிறது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சமூக வளைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் 2010ல் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் சமந்தா . இவரின் குடும்ப பாங்கான தோற்றம் இரசிகர்களை  மட்டுமல்ல அனைவரையும்  கவர்ந்தது.மேலும்,  தனுஷுடன் தங்கமகன்,விஜயுடன் தெறி,மெர்சல் மற்றும் சூர்யாவுடன் 24 உள்ளிட்ட‌ பிரபல நடிகர்களின் படங்களில் நாயாகியாக நடித்துள்ளார் சமந்தா. 

தமிழில் கடைசியாக வெளிவந்த சூப்பர் டீலாக்ஸ் படத்தில் சமந்தாவின், ரோல் பலதரப்பட்ட விமரசன‌ங்களை பெற்றாலும், இவரது துணிச்சலான நடிப்பிற்கு பாராட்டும் குவிந்த வண்ணம் இருந்தது. தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிற சமந்தா, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் (2010)  பெற்றுள்ளார்.

முன்னணி நடிகையாக திகலும் சமந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை 2017 ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது  கணவருடன் நடித்த தெலுங்கு மொழியில் வெளிவந்த 'மஜ்லி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close