நான்கு ஆண்டுகளாக‌ தயாரிக்கப்பட்ட படம்... ரிலீஸுக்கு ரெடி !

  கண்மணி   | Last Modified : 28 Apr, 2019 04:02 pm
a-r-rahman-s-movie-screen-on-june-21

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட ஏ. ஆர். ரகுமானின், கனவுப்படமான 99 சாங்ஸ் திரைப்படம் வரும் ஜூன் 21ம் தேதி உலகமெங்கும் திரையிடப்பட உள்ளது.

தனது இசை வாழ்க்கையை மையமாக கொண்ட திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு 99 சாங்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான கதை, இசை, தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை தானே மேற்கொண்டுள்ளார் ஏ. ஆர். ரகுமான். 

ஏ. ஆர். ரகுமானின் கனவு படமான 99 சங்ஸ் திரைப்படத்தில் அறிமுக நாயகன் எஹான் பட் மற்றும் எடில்சி வர்கஸ் நடித்துள்ளனர்.விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஒரு பாடகரின் வாழ்க்கை போரட்டத்தை மையமாக கொண்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 21ம் தேதி உலகமெங்கும் திரையிடப்பட உள்ளதாக ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close