நான் ஈ நாயகனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 29 Apr, 2019 12:17 pm
nani-s-next-movie

நான் ஈ திரைப்படத்தின் நாயகனான நானி, இவரின் 25 வது திரைப்படத்தை இயக்கவுள்ளவர். நானியின் முதல் படத்தை இயக்கிவர் என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

நான் ஈ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர் நானி. இவர் தெலுங்கு, தமிழ் அக்கிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக  தெலுங்கில் வெளிவந்த ஜெர்சி திரைப்படத்தில் விளையாட்டு வீரராக நடித்து அசத்தி இருந்தார் நானி. இந்நிலையில் புதிய ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார் நானி. அதில் தன்னை முதலில் அறிமுகம் செய்த இயக்குனர். மீண்டும் தனது 25 படத்தையும் இயக்க உள்ளார் என பதிவிட்டுள்ளார்.

மேலும், முதல் படத்தை போல் அல்லாமல் இந்த படம் சற்று மாறுபட்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ள நானி தனது 25 வது படம் குறித்த முழு தகவலும்,  விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.  நானியின் முதல் படமான‌ அட்டா சம்மா திரைப்படத்தை  மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close