ஸ்ருதிஹாசனின் காதல் தோல்விக்கு காரணம் என்ன?

  கண்மணி   | Last Modified : 30 Apr, 2019 05:34 pm
what-is-the-reason-for-shruti-haasan-s-love-failure

ஸ்ருதிஹாசனுக்கும்  மைக்கேல் காதர்சலேவுக்கும் இடையிலான காதல் பிரிவிற்கு  ஸ்ருதிஹாசன் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்ததே காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது

உலக நாயகன் கமல்ஹாச‌னின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சலேவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த சர்ச்சையை உறுதிபடுத்தும் வகையில் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகவே வலம் வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஸ்ருதி ஹாசன், அனைத்து காதல் பாடங்களுக்காகவும் நன்றி... இருண்ட இடங்களின் அடியாழத்தில் தான் ஒளி பிரகாசிக்கும். மேலும் இசை, மேலும் படங்கள் என எதிர்நோக்கியுள்ளேன். என்னுடனே நான் இருப்பது எப்போதுமே என்னுடைய பெரிய காதல் கதையாக இருந்துள்ளது” என்று பதிவு செய்திருந்தார்.

அதேபோல நடிகர் மைக்கேல் கார்சலேவும்  தனது சமூக வலைதளத்தில் “வாழ்க்கை நம் இருவரையும் உலகின் எதிர், எதிர் துருவங்களில் வைத்துள்ளது. ஆகையால், நாம் இருவருமே துரதிருஷ்டவசமாக தனித்தனி பாதையில் செல்ல வேண்டியுள்ளது. ஆனாலும், அவர் என்னுடைய சிறந்த தோழி தான் என பதிவு செய்துள்ளார். 

கடந்த இரண்டு வருடங்களாக திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்த  ஸ்ருதி மீண்டும் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன், காரணமாகவே  இருவருக்கும் இடையிலான காதல் முறிந்து விட்டதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close