தங்க மங்கைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கிய விஜய் சேதுபதி!

  அனிதா   | Last Modified : 30 Apr, 2019 10:36 am
vijay-sethupathi-gave-a-cash-prize-of-rs-5-lakh-to-gold-winner-komathi

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், திருச்சி முடிகண்டம் பகுதியை சேர்ந்த கோமதி கலந்துக் கொண்டு, மகளிருக்கான 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஐந்து லட்ச ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையை நடிகர் விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.

இதனை திருச்சியில் உள்ள கோமதியின் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில பொறுப்பாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியின் சார்பாக கோமதியிடம் வழங்கினர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி கோமதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close