ரிலீஸானது அயோக்யாவின் "கண்ணே கண்ணே.." பாடல்!

  கண்மணி   | Last Modified : 01 May, 2019 09:00 am
ayogya-song-release

ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில், தெலுங்கில் வெளியான படம் "டெம்பர்". இந்த படத்தின் ரீமேக், இந்தியில் "சிம்பா" என்னும் பெயரில் வெளியானது.  இதைத் தொடர்ந்து, தமிழில் விஷால் நடிப்பில் "அயோக்யா" என்னும்  பெயரில் 'டெம்பர்' பட ரீமேக் உருவாகி வருகிறது. இந்த படத்தில், ராசி கண்ணா கதாநாயகியாகவும், பார்த்திபன் வில்லனாகவும் நடித்து வருகின்றனர்.

ஆக்சன் படமான இந்த படத்தை, வெங்கட் மோஹன் இயக்குகிறார். அயோக்யா படத்தின் டீச‌ரைத் தொடர்ந்து, ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து இந்த படத்தின் "கண்ணே கண்ணே..." பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிரூத், "மீண்டும் ஒரு  கண்ணே கண்ணே"  என எழுதி பதிவிட்டுள்ளார். மேலும் அயோக்யா இந்த மாதம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close