திருமணத்திற்கு பின்னர் ஜோதிகா நடித்துவரும் படம் அனைத்துமே ஹிட்டாகி வருகிறது. அந்த வரிசையில் ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'காற்றின் மொழி' பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஜோதிகா தனது கணவரான சூர்யாவின், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 'குலேபகாவலி' கல்யாண் இயக்கும் ஜேக்பாட் என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார்.
டார்க் காமெடி திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஜேக்பாட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சூர்யா.
Presenting the first look of #JACKPOT get ready for an action packed fun ride! It’s a Jackpot for us to have both #Revathi & #Jyotika on board 👍🏼@DirKalyan @iYogiBabu @Composer_Vishal @anandakumardop @editorvijay @2D_ENTPVTLTD@rajsekarpandian @SF2_official@SonyMusicSouth pic.twitter.com/cpb4NXC8F0