சினிமா படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து: பல கோடி ரூபாய் அரங்கு எரிந்து சேதம்

  முத்து   | Last Modified : 02 May, 2019 03:12 pm
fire-crash-in-cinematic-shooting-area

மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே  சினிமா படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டதில், பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட படப்பிடிப்பு அரங்கு எரிந்து சேதமடைந்துள்ளது.

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இன்று சினிமா படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் தீ விபத்து ஏற்பட்டது. படப்பிடிப்பிற்கான அரங்கு அமைக்கும்போது வெல்டிங் பணியில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனே தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 4 வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட படப்பிடிப்பு அரங்கு எரிந்து சேதமடைந்துள்ளது. தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close