எலியினால் துன்புறுத்தப்படும் எஸ் ஜே சூர்யா....!

  கண்மணி   | Last Modified : 03 May, 2019 09:07 am
monster-official-teaser

ஒருநாள் கூத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். தற்போது மான்ஸ்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். 

பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மான்ஸ்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், மான்ஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில்  எஸ் ஜே சூர்யா ஒரு எலியினால் துன்புறுவது போன்ற காட்சிகள் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் படம் மிக வித்தியாசமான கதை களத்தை கொண்டிருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close