வித்யாசமாக வெளியிடப்பட்ட கொலைகாரன் ரிலீஸ் தேதி

  கண்மணி   | Last Modified : 03 May, 2019 11:38 am
kolaigaran-release-date

விஜய் ஆண்டனி நாயனாக நடித்துள்ள கொலைகாரன் திரைக்கு வர உள்ள தேதியை படத்தின் சில காட்சிகளோடு, வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழு 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, ‘காளி’ படத்துக்குப் பிறகு  தற்போது 'கொலைகாரன்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். . இதில் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். ’ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

மேலும் நாசர், சீதா, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தியா மூவிஸ் சார்பாக ப்ரதீப் தயாரிக்க, ஆண்ட்ரியு லூயிஸ் இயக்கியுள்ளார். ஏற்கனவே கொலைகாரன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து  இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை, ப‌டத்தின் சில காட்சிகளோடு, வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர் . அதன்படி கொலைகாரன்'  வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close