பிறந்த நாள் வாழ்த்துக்கள் த்ரிஷா

  கண்மணி   | Last Modified : 04 May, 2019 11:44 am
happy-birthday-trisha

சிக்கென்ற உடலுடன் இன்றும் ரசிகர்களை ஈர்க்கும் தோற்றத்தை கொண்டுள்ள த்ரிஷாவுக்கு NEWSTM சார்பாக பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். 

அன்று முதல் இன்று வரை இளைஞ‌ர்களின் கனவுக்கன்னியாக  வலம் வருபவர் த்ரிஷா. இவர் சென்னையின் 1983ம் ஆண்டு மே  4, தேதி பிறந்தார்.  படங்களில் நடிப்பதற்கு முன் மாடல் அழகியாக நடித்து வந்த இவர், 1999ம் ஆண்டு "சென்னை அழகியாக" தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வருடமே தமிழ் திறை உலகிலும் அறிமுகமாகி ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்தார்.  

சாமி, கில்லி , ஆறு, மங்காத்தா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில், தனது அழகிய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், 20 வருடங்களாகியும் முன்னணி நாயகியாக  திரைதுறையில் ஜொலித்து வருகிறார். இவரின் நடிப்பில் இந்த வருடம் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட.  தமிழ் தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ப்ரன்ஸ் உள்ளிட்ட மொழிகளை சரள‌மாக பேசுவார். சிக்கென்ற உடலுடன் இன்றும் ரசிகர்களை ஈர்க்கும் தோற்றத்தை கொண்டுள்ள த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close