பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் : தயாரிப்பாளர் ராஜன்

  கண்மணி   | Last Modified : 06 May, 2019 11:38 am
prakashraj-issue

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்,  மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், 'நான் தமிழன் அல்ல, தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோவது உண்மைதான்' என்றும் கூறினார்.
  
பிரகாஷ் ராஜின் இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இவரின் கருத்து குறித்து பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கர்நாடகத்தில் பிறந்த பிரகாஷ்ராஜை, கன்னட திரையுலகம் கைவிட்டபோது, தமிழரான பாலசந்தர் தான், அவருக்கு வாய்ப்பு கொடுத்து பெரிய நடிகராக்கினார். 

மேலும்,வட மாநிலத்தவர்களால் தான்  தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு தட்டி பறிக்கப்படுகிறது. எனவே பிரகாஷ் ராஜ் தான், கூறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், தமிழ் படங்களில் இனிமேல் பிரகாஷ் ராஜ் நடிக்க வாய்ப்பு மறுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close