நண்பர்களால் உருவாக்கப்பட்ட படத்திற்கு விருது

  கண்மணி   | Last Modified : 06 May, 2019 11:44 am
nedunalvaadai-movie-get-international-film-award

கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த  நெடுநல் வாடை திரைப்படத்தை, செல்வகண்ணன் இயக்கியிருந்தார். மேலும்  பூ ராமு, மைம் கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நட்ராஜ், செந்தில் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் செல்வாவின் நண்பர்கள் சிலர் சேர்ந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.  தங்களது நண்பனின் வெற்றிக்காக சக நண்பர்கள் நிதியுதவி செய்து தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று வெளியிடப்பட்ட படம் நெடுநல் வாடை.

இதன் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் நடைபெறும் கதையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகள்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை எடுத்து சொல்லும் கதைக்களத்தை கொண்டுள்ள  இந்த படம்,  பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு, கலந்து கொண்ட 160 திரைப்படங்களில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

 

— Ramesh Bala (@rameshlaus) May 5, 2019

 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close