மகேஷ்பாபுவுக்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்கும் சென்னை

  கண்மணி   | Last Modified : 06 May, 2019 05:21 pm
mash-opening-for-maharshi

பாரத் அனி நேனு' படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு தற்போது, வம்ஷி  இயக்கும் 'மகரிஷி' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே மற்றும் அலரி நரேஷின் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
இத்திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா  கிரியேஷன்ஸ், வைஜயந்தி மூவிஸ் மற்றும் பி.வி.பி. சினிமா ஆகியோரால் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 வருகிற மே 9ம் தேதி இத்திரைப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டுள்ளனர்.

இதனை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 40 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியிடப்பட உள்ளது. அதோடு தமிழ் படங்களுக்கு மட்டுமே சிறப்பு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' ஆங்கில திரைப்படத்தையும் சமீபத்தில் அதிகாலை சிறப்புக் காட்சி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 'மகரிஷி படத்திற்கும் அதிகாலை காட்சி திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close