இன்று பிறந்த நாள் காணும் சினிமா பிரபலம் !

  கண்மணி   | Last Modified : 07 May, 2019 12:41 pm
happy-birthday-adharva

பிரபல நடிகர் முரளியின் மகனும், இன்றைய‌ இளம் முன்னணி நடிகர்களில் ஒருவருமான நடிகர் அதர்வாவின் பிறந்த நாள் இன்று( மே 7). இவரின் பிறந்த நாளையொட்டி ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது தன்னிகரில்லா நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்றவர் நடிகர் முரளி. நடிப்பிற்கு கருப்பு நிறம் தடையில்லை என நிருபித்த நடிகர்களில் முரளியும் ஒருவர். இவரின் இரண்டாவது மகன் தான் அதர்வா. இவர், முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே 7ம் தேதி  பிறந்தார்.  இவர் இன்று தனது 30 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அதர்வாவின் முதல் படம் 2009இல் பத்ரி வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய, "பாணா காத்தாடி". இந்த  படத்தில் தான் அதர்வா கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.  இவருக்கு ஜோடியாக  நடிகை சமந்தா நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புக் குதிரை, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்த அதர்வா, "பரதேசி" திரைப்படத்தில் தனது தன்னிகரில்லா நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக வெளிவந்த "பூமரங்" திரைப்படம் இளைஞர்களின் எழுச்சியாக அமைந்து அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close