`வாக்களீப்பீர் ஒத்த கால் செருப்புக்கு' என தனது படத்தின் அறிவிப்பை துவங்கியுள்ளார் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார் என்ற தகவலையும் "அரசியல் கூட்டணி போல், மானம் மரியாதைக்கு விடுமுறை கொடுத்து கூட்டணி அமைப்பதைப் போல் இல்லாமல், இப்படத்தில் தான் அமைத்திருக்கும் கூட்டணி வெற்றி வாய்ப்பு உறுதி செய்யும் கூட்டணி" என அறிமுகம் செய்தார்.
இதனையடுத்து, டப்பிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கான அறிமுக விழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு, போட்டி ஒன்றை அறிவிக்க உள்ளார் பார்த்திபன்.
#os7
19th MAY
'ஒத்த செருப்பு size 7'-ன் அறிமுக விழாவில் ஒரு சிறப்பே விருந்தினராகக் கலந்துக் கொள்ளும் நிகழ்வில் உங்களில் யாருக்கெல்லாம் கலந்துக்கொள்ள விருப்பம்?
கை தூக்குங்கள்.அதற்கு ஒரு அறிவுப் போட்டி உண்டு.விவரம்
அடுத்தப் பதிவில் pic.twitter.com/M7h2cMahci