ஜெயம் ரவி படத்தில் மகனுடன் இணையும் பிரபலம்!

  கண்மணி   | Last Modified : 08 May, 2019 03:28 pm
jeyam-ravi-movie-update

ஜெயம்ரவி  நடிப்பில் வெளியான  'ரோமியோ ஜூலியட்', "போகன்" ஆகிய படங்களை இயக்கிய லக்ஷ்மன், ரவியின் 25 -வது படத்தை இயக்குகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் இத்திரைப்படத்தை தயாரிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படம் குறித்து ட்விட் செய்துள்ள ஸ்டண்ட் சிவா, இயக்குநர் லக்ஷ்மன் - ஜெயம் ரவி இணையவுள்ள படத்தில், நானும் எனது மகனும் இணைந்து சண்டைக் காட்சிகளை வடிவமைக்கவுள்ளோம். ஏற்கெனவே, ஜெயம் ரவி நடித்துள்ள "அடங்க மறு" படத்திலும் நாங்கள் இணைந்து பணியாற்றினோம் என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close