எலி படத்தின் இசை வெளியீட்டு விழா !

  கண்மணி   | Last Modified : 08 May, 2019 05:45 pm
monster-music-release-function

எலியால் ஹீரோ சந்திக்கும் பிரச்னைகளை மையமாக கொண்ட "மான்ஸ்டர்"  படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் வெங்கடேசன் , இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கான‌ இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ளார்.

பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மான்ஸ்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருந்ததுடன், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த திரைப்படம் வரும் மே 17 -ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close