சர்காரை பின்னுக்கு தள்ளி அடிச்சு தூக்கி சாதனை படைத்த ’தல’ யின் விஸ்வாசம்

  ராஜேஷ்.S   | Last Modified : 09 May, 2019 05:52 pm
trp-rating-1st-place-in-viswasam

பாகுபலி 2, சர்கார் படங்களை பின்னுக்கு தள்ளி TRP ரேட்டிங்கில் இந்தியளவில் முதலிடத்தை பிடித்து அஜித்தின் விஸ்வாசம்  திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ’விஸ்வாசம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  அஜித் படங்களில் அதிகம் வசூல் செய்த படமாகவும் விஸ்வாசம் உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தை மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து, விஸ்வாசம் படம் TRP-யில் 1,81,43,00 புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக அப்பட தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ், அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

பாகுபலி 2, பிச்சைக்காரன், சர்கார் படங்களின் TRP-யை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் படம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

TRP ரேட்டிங் விவரம்:

விஸ்வாசம் - 18143
பிச்சைக்காரன் - 17696
பாகுபலி 2 - 17070
சர்கார் - 16906 
 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close