விஜய் சேதுபதி, தனுஷ் படங்களை வெளியிட தடை!

  ராஜேஷ்.S   | Last Modified : 09 May, 2019 10:20 pm
actor-vijay-sethupathi-s-film-is-banned

விஜய் சேதுபதியின் ’சிந்துபாத்’, தனுஷின் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரு படங்களையும் வெளியிட ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த இரு திரைப்படங்களையும் கேப்டன் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட இருந்தார். பாகுபலி படத்தை வெளியிட்டதில் ராஜராஜன் ரூ.17.60 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறி, பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ’சிந்துபாத்’, தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரு திரைப்படங்களையும் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close