தானா சேர்ந்த கூட்டம்" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' படத்தில் நடித்துள்ளார். இதனை செல்வராகவன் இயக்குகிறார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள, இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'வரும் மே31ல் ரிலீஸ் செய்யப்படும்.
தற்போது இந்த படத்திற்கான போட்டியை ட்விட் செய்துள்ளனர் படக்குழுவினர். அதில் சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத் சிங் கிஃப் புகைப்படத்தை வெளியிட்டு, இதற்கு என்ன தலைப்பு என்பதை கண்டுபிடியுங்கள் என ட்வீட் செய்துள்ளார்கள். இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது கருத்தை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறனர்.
Can you caption this?
— NGK Movie (@NGKmovie) May 10, 2019
🤔🤔🤔#NGKFromMay31 @Sai_Pallavi92 @Rakulpreet pic.twitter.com/Sx7O8G8M9H
newstm.in