'களவாணி 2' திரைப்படத்தை நடிகர் விமல் தயாரித்து தருவதாக்க கூறினார்: சிங்காரவேலன்

  அனிதா   | Last Modified : 11 May, 2019 03:29 pm
actor-vimal-is-said-her-producing-kalavani-2

களவாணி - 2  திரைப்படத்தை தயாரித்து தருவதாகக் கூறி நடிகர் விமல் தன்னிடம் 1.5 கோடி ரூபாய் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றம்சாட்டியுள்ளார்.

களவாணி - 2 திரைப்படத்தை வெளியிட கூடாது என  தயாரிப்பாளர் சிங்காரவேலன் பல்வேறு வகைகளில் மிரட்டல்கள் விடுப்பதாகவும், போலி ஆவணங்கள் தயார் செய்திருப்பதாகவும்  திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான சற்குணம் நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் எழும்பூரில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் களவாணி - 2 திரைப்படம் விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சிங்காரவேலனிடம் விசாரணை நடத்தினர். 

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சிங்காரவேலன், களவாணி - 2 திரைப்படத்தை தான் தயாரித்து தருவதாகக் கூறி நடிகர் விமல் தன்னிடம் ரூ.1.5 கோடி பணம் பெற்றதாகவும், நடிகர் விமல் பணம் பெற்றது இயக்குநர் சற்குணத்திற்கு தெரியும் எனவும் கூறினார். மேலும், படம் வெளியீட்டுக்கு தான் தடையாக இருப்பதால் தன் பெயரில் பொய்யான புகாரை இயக்குனர் சற்குணம் கூறிவருவதாக அவர் குற்றம் சாட்டினார். 

நடிகர் விமல் களவானி - 2 திரைப்படத்தை தயாரித்து தருவதாகக் கூறி தன்னிடம் பணம் பெற்றதற்கான ஆவணங்களையும், படத்தின் தலைப்பு உரிமை, விநியோக உரிமைக்கான அனைத்து ஆவணங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்திருப்பதாக கூறிய அவர், இதில் போலி ஆவணங்கள் ஏதும் இல்லை என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close