பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களுக்கு சாபம் விடும் நடிகர்!

  கண்மணி   | Last Modified : 12 May, 2019 01:07 pm
thaai-a-raghava-lawrence-initiative

'தாய்' எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்களை மீட்கும் விதமாக  தமிழகமெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன் முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.  இப்பாடலை அன்னையர் தினமான இன்று ( மே 12) அவர் வெளியிட்டுள்ளார். 

ராகவா லாரன்ஸ், அவரது அம்மாவிற்கு அமைத்த  திருவுருவச் சிலையுடனான காட்சியுடன் தொடங்கும் அந்த வீடியோவில், முதியோர் இல்லத்தில் தவிக்கும் பெற்றோரின் அவலங்கள் எடுத்துக் கூறப்படுகிறது. தொடர்ந்து "பெத்துப் போட்ட தீட்டுப் பாவம் சும்மா விடாது" என தொடங்கும் பாடல், அன்னையை நேசிக்கும் ஒவ்வொருவரையும் உருக வைக்கும். மேலும், இந்த பாடலுக்கு  ராகவா லாரன்ஸ் நடனம் ஆடிய‌ வீடியோவை விரைவில் வெளியிட உள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close