தனது தாயின் தனிமைக்காக வருந்தும் நடிகை!

  கண்மணி   | Last Modified : 12 May, 2019 01:15 pm
mother-day-wishes-by-varalaxmi-sarathkumar

அன்னையார் தினத்தை முன்னிட்டி, பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது தாயாரான சாயா சரத்குமாருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் சரத்குமாரும், அவரின் முதல் மனைவியான சாயாவும் கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என இரண்டு மகள்கள். இதில் வரலட்சுமி நாம் அறிந்த பிரபல நடிகை.  தற்போது வரை சாயா தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், அன்னையர் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள வரலட்சுமி, 'எனது கனவை நான் பின் தொடர உதவி செய்து, என்னை யார் என நீங்கள் உணர செய்தீர்கள். ஆனால் இன்று வரை நீங்கள் தனிமையில் தவித்து வருகிறீர்கள்' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தனது தாயாரின் தனிமைக்கு காரணமான தந்தையின் செயலை எண்ணி வரலட்சுமி வருத்தப்படுவது போல அமைந்துள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close