'அயோக்யா' -  இப்படி ஏமாந்துட்டாரே நடிகர் பார்த்திபன்!

  கண்மணி   | Last Modified : 13 May, 2019 10:24 am
parthian-twit-about-ayokya

நேற்று வெளியான அயோக்யா படத்தை பார்த்து அதிர்ந்து விட்டார் பார்த்திபன் . ஏனென்றால், அயோக்யா படத்தின் கதை, 1994ல் பார்த்திபன் இயக்கி நடித்த உள்ளே வெளியே படத்தின் கதையாம்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்  ‘அயோக்யா;. இந்த படம், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி  ஹிட்டடித்த ‘டெம்பர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். மேலும், இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும், லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல இடர்பாடுகளுக்கிடையே நேற்று (மே11)  திரையிடப்பட்டது. இந்நிலையில், இந்த படம் குறித்து ட்விட் செய்துள்ள பார்த்திபன், 1994ல் வெளிவந்த 'உள்ளே வெளியே' படத்தின் கதையை தனக்கு தெரியாமல் சுட்டு, அந்த படத்தில் தன்னையே நடிக்க வைத்திருப்பது எவ்வளவு பெரிய அயோக்யத்தனம் என பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close