விஜய், அஜித் திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்

  ராஜேஷ்.S   | Last Modified : 12 May, 2019 04:14 pm
cinima-producere-venkatrama-reddy-passes-away

விஜயா வாகினி புரொடக்‌ஷன்ஸ் நாகிரெட்டி அவர்களின் இளையமகனும், திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கட்ராம ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 75. உழைப்பாளி, தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் வெங்கட்ராம ரெட்டி. தற்போது இவரின் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்து வரும் ’சங்கதமிழன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வெங்கட்ராம ரெட்டியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close