எனக்கும், விஷாலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை - பார்த்திபன் விளக்கம்!

  முத்துமாரி   | Last Modified : 12 May, 2019 06:28 pm
actor-parthiban-tweet

வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான  ‘அயோக்யா' திரைப்படம்  நேற்று ரிலீசானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் இதனை தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், இப்படம் குறித்து, "1994ல் எனது நடிப்பில் வெளிவந்த 'உள்ளே வெளியே' படத்தின் கதையை, எனக்கு தெரியாமல் சுட்டு, அந்த படத்தில் என்னையே நடிக்க வைத்திருப்பது எவ்வளவு பெரிய அயோக்யத்தனம்" என ட்வீட் செய்திருந்தார். 

பார்த்திபனின் இந்த ட்வீட் சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவியது. மேலும், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை கமெண்டுகளாக பதிவிட்டனர். 

இதையடுத்து நடிகர் பார்த்திபன் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அதில், தனக்கும் விஷாலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, வழக்கம் போல தனது குறும்பை காட்டினேன் என்றவாறு விளக்கமளித்துள்ளார். 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close