நாகர்கோவில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம்

  கண்மணி   | Last Modified : 13 May, 2019 10:41 am
prairie-movie

தயாரிப்பாளார், கதாநாயகன், இயக்குனர் என  படக்குழு  அறிமுகமாகும் திரைப்படம் பைரி. பைரி என்றால் கால்நடைகளைப் பரிசோதிப்பவன் என்று பொருள்.  இந்த பெயரை தலைப்பாக கொண்டு, புறா பந்தயத்தையை கதைக் கருவாக கொண்டும் உருவாகும் திரைப்படம் இது.  

இந்த படத்தை   D.K புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக  வி.துரைராஜ் தயாரிக்க, குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத் நாயகனாகவும் கொண்டு  குறும்பட இயக்குனரான 'ஜான் கிளாடி' இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

மேலும், மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன், விஜி சேகர், S.R.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ்  உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கான இசை அருண் ராஜ், ஒளிப்பதிவு  ஏ.வி. வசந்த் ஆகியோர் பணியாற்றும் இந்த படம்.  நாகர்கோவிலில் நடந்த புறா பந்தயத்தின் பல உண்மை சம்பவங்களை எடுத்து சொல்லும் படமாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close