சீனாவில் கலக்கும் ஸ்ரீதேவியின் "மாம்" : வசூல் எவ்வளவு தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 13 May, 2019 08:05 pm
sridevi-s-mom-movie

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் 300 -ஆவது திரைப்படம் "மாம்". இப்படம் ரவி உத்ய‌வர் இயக்கத்தில் உருவானது . மேலும் இப்படம் கடந்த 2017ல் சீனா தவிர மற்ற நாடுகளில் திரையிடப்பட்டது. மாம் திரைப்படம் த்ரில்லர் படமாக அமைந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதோடு தேசிய விருதையும் பெற்றது. ஜீ ஸ்டுடியோ மாம் படத்தை சர்வதேச நாடுகளில் திரையிட்டது. 

இந்நிலையில், "மாம்" படம்  வெளியாகி  இரண்டு வருடங்களுக்கு பிறகு, சீனாவில் கடந்த 10 ஆம் தேதி திரையிடப்பட்டது. சீனாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஸ்ரீதேவியின் "மாம்" திரைப்படம், அங்கு பாக்ஸ் ஆபிஸில், தற்போது வரை இந்திய மதிப்பில் ரூ.40 கோடியை வசூலித்துள்ளதாக‌ தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close