'லவ், லவ் மீ' என காதலியிடம் கெஞ்சும் பிரபு தேவா 

  கண்மணி   | Last Modified : 14 May, 2019 05:40 pm
devi-2-love-love-me-lyrical-song-video

 2016ல் பிரபு தேவா, தமன்னா நடிப்பில் திரைக்கு வந்த படம் தேவி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது,  இதனைதொடர்ந்து, தேவி படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கி உள்ளார் ஏ.எல் விஜய்.  

இதில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜி.வி. பிலிம்ஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள, இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தேவி 2 திரைப்படத்தின் லவ் லவ் மீ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த வீடியோ சாம் சிஎஸ்யின் குதுகல‌ இசையில், தென்னிந்திய மைக்கில் ஜாக்சன் என புகழப்படும் பிரபு தேவாவின் இளமை துள்ளாட்டம் வீடியோவை காண்பவர்களை, குத்தாட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும்  படப்பிடிப்பின் போது நடைபெற்ற குறும்பு காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close