துணை ஜனாதிபதிக்கு நன்றி கூறிய மஹர்ஷி நாயகன்...!

  கண்மணி   | Last Modified : 15 May, 2019 12:09 pm
mahesh-babu-thanks-to-vice-president-of-india

விவசாயிகளின் பிரச்னைகளை கருவாக கொண்டு உருவாகிய படம் மஹர்ஷி.  மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். மேலும் படத்திற்கான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார்.

கடந்த மே 9ம் தேதி திரைக்கு வந்த' மஹர்ஷி' திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ளார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அதில், 'மஹர்ஷி' திரைப்படம் கிராமப்புற மனிதர்களையும், விவசாயிகளையும் உயர்வாக பேசியிருக்கிறது.  விவசாயிகள் குறித்த உரையாடல்களின் அவசியத்தை எடுத்துக்கூறுவதால்,'மஹர்ஷி' ஒரு முக்கிய படம் என தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் மகேஷ் பாபு, உங்களது வாழ்த்து, என்னையும் என் படக்குழுவினரையும் கௌரவப்படுத்துவதாக அமைந்துள்ளது. நன்றி சார், என பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close