தடம் நாயகனின் அடுத்த பயணம்...!

  கண்மணி   | Last Modified : 16 May, 2019 10:00 am
arunvijay-next-film-first-look

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம். இந்த ' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து,  பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரின்  அடுத்த படம் குறித்த  தகவலை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதில்  விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்தில் அருண்விஜய் நடிக்க உள்ளதாகவும்.  இவருக்கு ஜோடியாக நடிக்க ரித்திகா சிங்கும் உள்ளார்.  இந்த படத்திற்கான இசை-  டி.இமான், சண்டைக்காட்சிகள் -பீ ட்டர் ஹெயின்,   ஒளிப்பதிவு- மார்குஸ், கலை- சி.எஸ்.பாலச்சந்தர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும்,எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close