மீண்டும் விருது பெற்ற இயக்குனர் வசந்தின் திரைப்படம்...!

  கண்மணி   | Last Modified : 16 May, 2019 10:14 am
sivaranjaniyum-innum-sila-penkalum-get-another-award

ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு இயக்கப்பட்ட படம் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்". இப்படம்  பூவெல்லாம் கேட்டுப்பார் இயக்குனர் வசந்த்தால் இயக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் பார்வதி, லட்சுமி பிரியா, சந்திரமௌலி, கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா உள்ளிட்டோர்  நடித்திருக்கின்றனர். 

இந்த திரைப்படம் பூனே சர்வதேச திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச விழா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட விழாக்களில் விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்துக்கு மேலும் கௌரவம் சேர்க்கும் வகையில், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச திபுரான் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழா, மற்றும் அட்லாண்ட் மாகாணத்தின் திரைப்பட விழாவில்  திரையிடப்பட்ட ''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'   திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close