ஜெயம் ரவி பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். கமலின் தசாவதாரம் திரைப்படத்தை அடுத்து 9 கெட்டப்புகளில் உருவாகும் படம் 'கோமாளி' என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் ஜெயம் ரவி மன குழப்பம் நிறைந்த மனநோயாளி போன்று காட்சி அளிக்கிறார்.
To all my fans & friends, here it is #ComaliMotionPoster. Keep your expectations high for upcoming days, More surprises awaiting.
— Jayam Ravi (@actor_jayamravi) May 18, 2019
Feel the silver screen experience in @agscinemas 🎭@Pradeeponelife @MSKajalAggarwal @SamyukthaHegde @Richardmnathan @hiphoptamizha @VelsFilmIntl pic.twitter.com/ZAFmvl1YG0
newstm.in