"மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்" - கமல் ஹாசன்

  முத்துமாரி   | Last Modified : 19 May, 2019 03:27 pm
kamal-haasan-speech-at-music-launch-programme

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒத்த செருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "ஒத்த செருப்பு" என்ற படத்தின் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தது மிகவும் பொருந்தி உள்ளது என்று நான் நினைக்கிறேன். 

நான், காந்தியின் சுயசரிதையை திரும்பத் திரும்பப் படித்தவன். காந்தி ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது, அவரது ஒரு செருப்பு கீழே விழுந்து விட்டது. உடனே மற்றொரு செருப்பையும் அவர் தூக்கி எறிந்து விட்டாராம். ஒரு செருப்பு என்பது யாருக்கும் பயன்படாது, அதனால் தான் இரண்டாவது செருப்பையும் எறிந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

அதுபோன்றே நானும், மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். காந்தியின் ஒரு செருப்பு என்னிடம் வந்து விட்டது. மற்றொரு செருப்பும் விரைவில் வரும் என்று நம்புகிறேன். என்மீது செருப்பு வீசப்பட்டது குறித்து பலர் பயந்து பயந்து பேசுகிறார்கள். அவர்கள் பயப்படவேண்டியதில்லை. செருப்பு வீசியவருக்கு தான் அந்த அவமானம் எனக்கு இல்லை" என்று பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close