காட்டுவாசி முதல் காவலாளி வரை அசத்தும் ஜெயம் ரவி!

  கண்மணி   | Last Modified : 27 May, 2019 11:29 am
comali-motion-poster

ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். கமலின் "தசாவதாரம்" திரைப்படத்தை அடுத்து  9 கெட்டப்புகளில் உருவாகும் படம் "கோமாளி" என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இந்த படத்தின் மோசன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர் படக்குழு. இதில் மாணவன், காவலாளி, காட்டுவாசி, நோயாளி உள்ளிட்ட 9 வேடங்களில் போஸ் கொடுக்கிறார் ஜெயம் ரவி.  கதையில் அதிக திருப்பங்கள் இருக்கலாம் என இந்த போஸ்டரின் மூலம் தெரிகிறது.

 

— Vels Film International (@VelsFilmIntl) May 26, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close